""கடமையில் இருந்த மருத்துவ துறையினர், இராணுவத்தினர், பொலீஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சுத்திகரிப்பு பணியாளர்களின் அர்பணிப்பான சேவையை போற்றும் விதமாக சிற்றூண்டியும் குளிர்பானமும் வழங்கி சித்திரை தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டமும் வாழ்த்துக்களும் ""
மலர்ந்த தமிழ் சிங்கள புத்தாண்டில் நாட்டில் நிலவும் அபாயகரமான சூழ்நிலையைில் தம் குடும்பங்களையும், தம் விருப்பு வெறுப்புகளையும் ஓரம்கட்டி இரவு பகல் பாராது இயந்திரமாய் இயங்கும் மருத்துவதுறை சார்ந்தவர்கள், இராணுவத்தினர், பொலீஸ் பிரிவினர், சுத்திகரிப்பு தொழிலாளர்களின் சேவையை போற்றும் விதமாகவும் அவர்களுடன் தமிழ் சிங்கள புத்தாண்டினை சிறப்பிக்கும் விதமாக 14.04.2020 அன்று18:00 மணி முதல் - 22:45 மணிவரை காங்கேசன்துறை - யாழ்ப்பாணம் & யாழ்ப்பாணம் - பாலாலி பிரதான வீதியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மற்றும் பொலீசாரிற்கும் காங்கேசன்துறை, தெல்லிப்பளை, யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையங்களில் கடமையில் இருந்த உத்தியோகத்தர்களிற்கும்
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை மருத்துவ துறையினர், நோயாளர்கள், சுத்திகரிப்பு பணியாளர்களிற்கு சிற்றூண்டிகளும் குளிர்பானமும் வழங்கி மகிழ்வித்து மகிழ்ந்தமை மனதிற்கு மிகுந்த மகிழ்வளிக்கின்றது.
We exist for non-profits, social enterprises, community groups, activists,lorem politicians and individual citizens that are making.