வவுனியா மாவட்டம் தரணிக்குளம் கிராமத்தில் உள்ள தேவைப்பாடுடைய மாணவா்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

  • Home
  • வவுனியா மாவட்டம் தரணிக்குளம் கிராமத்தில் உள்ள தேவைப்பாடுடைய மாணவா்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
  • Completed
  • By - VTF

வவுனியா மாவட்டம் தரணிக்குளம் கிராமத்தில் உள்ள தேவைப்பாடுடைய மாணவா்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

project

விது நம்பிக்கை  நிதியத்தினரால் வவுனியா மாவட்டம் தரணிக்குளம் கிராமத்தில் உள்ள  தேவைப்பாடுடைய மாணவா்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தரணிக்குளம் கணேஸ் வித்தியாலத்தில்    31.01.2016 நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் 90 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

அகில இலங்கை சைவ மகாசபையின் ஏற்ப்பாட்டில் விது நம்பிக்கை நிதியத்தினரால்  வழங்கப்பட்ட இந்த உதவி வழங்கும் நிகழ்வில் அகில இலங்கை சைவ மகாசபையின் தலைவா் சிவத்திரு. சோதிமூா்த்தி விது நம்பிக்கை நிதியத்தின் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளா்  , நிா்வாக உத்தியோகத்தா் ,பாலவிநாயகா் ஆலயத்தலைவா் பரமேஸ்வரன் வித்தியாலய அதிபர் , வவுனியா மாவட்ட அறநெறி இணைப்பாளா் ,அகில இலங்கை சைவ மகா சபையின் உறுப்பினர்கள் ,பெற்றோர்கள் ,சமூக ஆர்வலர்கள் ,கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வை தொடர்ந்து தரணிக்குளம் ,சுற்றயல் கிராமங்களில்  நடைபெறும்  அறநெறி பாடசாலைகளை மேம்படுத்துவது தொடா்பாக ஆராயப்பட்டதுடன் கலந்துகொண்ட மாணவா்களுக்கு யோகாசன பேராசிாியா் சோதிமூா்த்தி அவா்களினால் யோகாசன தியான பயிற்சி வகுப்பு இடம்பெற்று நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.