No image available
பதுளையில் இருந்து உயர்தரக் கல்வியை கற்பதற்காக யாழ்ப்பாணம் சந்நிதியான் ஆச்சிரம் வந்து, போக்குவரத்து நெருக்கடி காரணமாக அங்கிருந்து அகில இலங்கை சைவமகா சபையின் கொக்குவில் அலுவலக கட்டட தொகுதியில் நன்கொடையாளர்களின் நிதி பங்களிப்புடன் யாழ் இந்து கல்லூரியில் 2018ம் ஆண்டு கணிதப் பிரிவில் கல்வி பயின்ற சண்முகநாதன் ஆறுமுகம் பரீட்சைக்கு தோற்றும் இவ் ஆண்டின் ஆரம்பம் முதல் சைவமகா சபையினரால் உதவிகள் மறுக்கப்பட்ட நிலையில் உளவியல் ரீதியாக பெரிதும் பாதிப்படைந்து கல்வியினை இடைநிறுத்தி மீண்டும் பதுளை செல்வதற்கு முடிவு செய்தார்.
ஆறுமுகத்தின் சமயம், சமூகம்சார் ஈடுபாடு மற்றும் கல்வித் திறமைகளை அறிந்த விது நம்பிக்கை நிதியமானது அம் மாணவனின் தேவையறிந்து அவரிற்கு பரீட்சை நிறைவுறும் வரை கற்றல், தங்குமிடம் மற்றும் உணவு போன்றவற்றின் முழு பொறுப்பினையும் ஏற்றுக் கொண்டு மாணவனின் கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பை உருவாக்கியது.
இத்தனை மனஉளைச்சல்களின் மத்தியிலும் 2018ம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவன் செல்வன் சண்முநாதன் ஆறுமுகம் கணிதப் பிரிவில் 3B பெற்று சித்தியடைந்துள்ளார்.
We exist for non-profits, social enterprises, community groups, activists,lorem politicians and individual citizens that are making.