தமிழ் சைகை மொழி பயிற்சி நெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 05.09.2020 அன்று வரமராட்சி செவிப்புல வலுவிழந்தோரின் வேண்டு கோளிற்கமைய யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைப்பிரிவினரால் வழங்கப்பட்ட கட்டடத்தில், விது நம்பிக்கை நிதியத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் சைகை மொழி பயிற்சி நெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது 08.04.2021 அன்று காங்கேசன்துறை தால்சவேனா இராணுவ விடுதியில், விதுநம்பிக்கை நிதிய பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வின் பிரதமவிருந்தினராக மேஜர் ஜென்றல் பிரியந்த பெரேரா, ஆசிரியரும் நிர்வாக இயக்குநருமான இரா. அருட்செல்வம், கௌரவ விருந்தினராக வைத்தியகலாநிதி மகேசு பிரதீபன், வடமராட்சி செவிப்புலவலுவிழந்த சமூகத்தினர் மற்றும் வடக்கு மாகாண விசேடகல்வி உதவிகல்விப் பணிப்பாளர் திரு. வி.விஷ்ணுகரன் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர். மாணவர்களிற்கான சான்றிதழ்களும் சிறந்த ஐந்து மாணவர்களிற்கான பதக்கங்களும் வழங்கப்பட்டதுடன், மாணவர்களால் ஆசிரியர்களும் விருந்தினர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
We exist for non-profits, social enterprises, community groups, activists,lorem politicians and individual citizens that are making.